top of page
ALL INDIA
ASPIRING WRITER's
AWARD
VIGNESH
REGISTRATION ID
B6854
YOUR FINAL SCORE IS IN BETWEEN
9.15 - 9.75
IFHINDIA CONGRATULATE YOU FOR BEING IN THE TOP 10 FINALISTS.
1. THE TITLE WINNER SCORE MUST BE MORE THAN 9.70 WHO WILL BE WINNING 1,50,000/- CASH PRIZE & YOU MAY BE ONE OF THEM FOR SURE BECAUSE OUR FINAL WINNER IS IN BETWEEN THOSE TOP 10 FINALISTS INCLUDING YOU.
2. SINCE YOU ARE ONE OF THOSE TOP 10 FINALIST YOU WILL BE GETTING EXCLUSIVE GIFT COUPON WORTH 5000/- EACH
(Note : You must participate either in ONLINE EVENT or OFFLINE EVENT without fail to get your AWARD BENEFITS)
3. ALL TOP 10 FINALIST INCLUDING YOU MUST PARTICIPATE IN THE MEGA EVENT EITHER OFFLINE OR ONLINE BECAUSE EVEN YOU MAY BE THE ONE WHO WIN THE TITLE FOR SURE.
4. INCASE YOU ARE NOT WILLING TO PARTICIPATE IN THE MEGA EVENT/ AWARD CEREMONY EITHER OFFLINE OR ONLINE then your journey in the contest will end here. HOWEVER YOU WILL STILL RECEIVE THE BEST 25 WRITERS BENEFITS but you will not get any benefits for being in the TOP 10 incase you quit from the contest hereafter.
click on the below link to know more information about the FINAL ROUND
Written By
VIGNESH
நத்தை
மழைக்காலத்து சாலையொன்றை கடந்திட எத்தனிக்கும் நத்தையை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தவனின் கருத்த உடல் சிவக்கும் அளவிற்கு முதுகில் சுளீரென்று விழுந்த அடியினில், அதுவரை ஆழ்ந்த தியானத்திலிருந்தவன் சட்டென கைகளை கட்டிக்கொண்டு தனது தினசரி வேலையை செய்வதுபோல் அப்படியே அமர்ந்து கொண்டான். பரதேசி நாயே பைத்தியம் பைத்தியம் என்னத்த அங்க பாத்துக்கிட்டு இருக்க சனியனே இந்த சோத்த தின்னு. எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கு பாரு என வசைபாடிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள், அதுவரை தரையையே பார்த்து கொண்டிருந்தவன் நீண்ட காலம் இதற்கு பழகியிருந்ததால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அந்த தட்டினை தனதருகில் இருத்திக்கொண்டு மீண்டும் தனது முழு கவனத்தையும் நத்தையின் மீது செலுத்தினான்.
இருள் மெல்ல கவியத் தொடங்கியிருந்தது அந்த ஊரில் அதுதான் கடைசி வீடு அதனை வீடென்றுலாம் சொல்லிவிட முடியாது எப்போது வேண்டுமானாலும் நிரம்பி வழிய காத்துக்கொண்டிருக்கும் குளத்தின் விளிம்பில் உள்ள கையகல நிலத்தில், தார்பாயால் போர்த்தப்பட்ட நான்கு கொம்புகள் மட்டுமே கொண்ட கூடாரம் அது. அந்த கூடாரத்தை ஒட்டியே குளத்தை இரண்டாக பிரிக்கும் அருகாமை கிராமத்திற்கான முட்புதர்கள் நிறைந்த நீண்டதொரு ஒற்றையடி பாதையும் அதில் எப்போதாவது வாகனங்களும் வந்து போவதுண்டு. அச்சாலையின் தொடக்கத்தில் உள்ள தெரு விளக்கின் வெளிச்சத்தில்தான் இப்போது நத்தையும் கூடாரமும் அவன் கால்களில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியும் மிளிர்கின்றன.
அந்த சாலைக்கும் கூடாரத்திற்கும் கால் நீட்டும் அளவிற்கே இருந்த இடைவெளியில் மிக ஜாக்கிரதையாக கூடாரத்தின் அருகினில் மழை துளிகள் மேல் படாத வண்ணம் சம்மனக்கால் போட்டுக்கொண்டு, கூடாரத்தின் எதிர் புறத்திலிருக்கும் மிக நீண்ட மலைத்தொடரை எப்போதும் பார்த்து கொண்டிருப்பவன் இப்போது எல்லாவற்றையும் மறந்து உள்ளங்கை தலையை தாங்கி கொண்டிருக்க தூரிக் கொண்டிருக்கும் மழை துளிகளுக்கு இடையே கண் சிமிட்டாமல் தெரு விளக்கின் வெளிச்சத்தில் ஊர்ந்து கொண்டிருக்கும் நத்தையை தொடர்ந்து கவனித்து கொண்டிருந்தான்.
நத்தை தனது உடலை மெல்ல அசைத்து அசைத்து, நிழல் மட்டும் காணும் கண்களை வெளியே நீட்டி வழியெங்கும் உடலில் சிறு சிறு மணலும் புழுதியும் அப்பிக்கொண்டிருக்க எறும்புகள் அதன் ஓட்டின் மீது அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருக்க மிக நிதானமாக வழியெங்கும் தன்னிலிருந்து வெளிப்படும் பிசுபிசுப்பை தரையெங்கும் போர்த்தி அதன்மீது ஒய்யாரமாக மிதந்து செல்லும் நத்தையை எப்படியாவது கொன்றுவிடு என அவனுள் ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது, அதுவரை நத்தையின் மீதிருந்த கவனம் சிதறி உடல் நடுங்க என்ன செய்வது என புரியாமல் எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டும் என முயற்சி செய்தவனை சங்கிலி தடுத்து நிறுத்தியது, பின் நிதானித்து தனதருகே இருந்த துணியை கையிலெடுத்து முழு உடலையும் மறைத்து போர்த்திக்கொள்ள இந்த இருளினில் ஒளிந்து கொள்ளவதால் எப்படியும் நாம் அந்த குரலிடமிருந்து தப்பித்துவிடுவோம் என தொடர்ந்து முனுமுனுத்து கொண்டிருந்தவனிடம். அந்த குரல் நீ என்னிடமிருந்து தப்பிக்கவோ அல்லது ஒளிந்து கொள்ளவோ முடியாது நீ நிச்சயமாக அந்த நத்தையை கொன்றே ஆக வேண்டும். என மீண்டும் கேட்க தனது காதுகளுக்குள் கைகளை வைத்து அடைத்துகொண்டு செய்வதறியாது மீண்டும் அந்த இருளின் இறுக்கத்திற்குள் தப்பிக்க முயற்சி செய்தான், அப்போதும் அந்த குரல் அவனை விடுவதாய் இல்லை தான் போர்த்தியிருந்த துணியை விளக்கியவன் ஆக்ரோசமாக கத்த தொடங்கினான் தனது கோவம் தீர கத்திக்கொண்டே இருந்தான், இருளின் நிசப்தத்தை கிழித்தெறியும் அவனது கத்தலுக்கு அந்த ஊர் பழகியிருந்தது, பின் அழுதுகொண்டே என்னை விட்டு அந்த நத்தையை பார்க்க பாவமாக இருக்கிறது என்னால் நிச்சயமாக அதை கொலை செய்ய முடியாது என கெஞ்சியவன் திடீரென நான் எதற்காக அந்த நத்தையை கொல்ல வேண்டும், இது என்ன முட்டாள் தனமாக இருக்கிறது அது யாரையும் தொந்தரவு செய்யாமல் மிக சுதந்திரமாக பயணித்து கொண்டிருக்கிறது அது எதற்காக சாலையை கடந்து மறுபக்க குளத்திற்கு போகிறது என்பதுகூட எனக்கு தெரியாது, நான் நிச்சயமாக அதனை கொலை செய்ய மாட்டேன் உனது குரலையும் அதன் எண்ணத்தையும் நான் முழுமையாக வெறுக்கிறேன் என்னால் அதனை கொலை செய்ய முடியாது நீ இனிமேல் என்னிடம் பேசாதே என்னை விட்டுவிட்டு எங்காவது போய் இறந்து போ என தீர்க்கமான குரலில் சொன்னான்.
இவனது எல்லா செயல்களையும் பார்த்து கொண்டிருந்த குரல் நிறுத்தாமல் தொடர்ந்து சிரிக்க தொடங்கியது இவனது காதுகளில் அதன் சிரிப்பு சத்தம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்க அவனால் இந்த சிரிப்பொலியை கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியாமல் மீண்டும் அதனிடம் மன்றாடினான் என்னை விட்டு விடு இதுவரை நீ சொன்னதை செய்ததெல்லாம் போதும் இனி என்னால் எதுவும் செய்ய முடியாது தயவது செய்து உனது சிரிப்பதை நிறுத்து, உனது சிரிப்பு சத்தம் எனது கால் சங்கிலியால் ஏற்பட்ட காயத்தில் ஊரும் புழுக்கள் போல உடம்பெல்லாம் நெளிகிறது உனக்கு கொஞ்சம் கூட என் மீது இறக்கம் இல்லையா எதற்காக இப்படி சிரிக்கிறாய் நான் உன்னை தான் திட்டிக்கொண்டிருக்கிறேன் உனக்கு அறிவு இருக்கா இல்லையா... நீ இறந்துபோககூட வேண்டாம் ஆனால் நீ சிரிப்பதை மட்டும் நிறுத்திவிடு போதும் போதுமென புலம்பி அழுதுகொண்டேயிருந்தான்..,
எந்த சலனமும் இல்லாமல் அந்த குரல் தொடர்ந்து சிரித்துக்கொண்டே அதனை கொல்வதைத்தவிர உனக்கு நான் வேறெதுவும் சொல்ல மாட்டேன் இதுதான் கடைசி முறை நீ இதனை நான் சொல்வதுபோல் செய்தால் நிச்சயமாக நான் உன்னை விட்டு விலகிவிடுவேன் என உறுதியளித்த குரலிடம், நீ ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்கிறாய் ஆனால் ஒருபோதும் என்னை விட்டு விழகுவதாக எனக்கு தெரியவில்லை உன்னை எப்படி நான் நம்புவது, அப்படியே நம்பினாலும் நான் நிச்சயமாக அதை கொலை செய்ய மாட்டேன் உன்னிடம் இதற்கு மேல் நான் எதுவும் பேச தயாராக இல்லை உனது பேச்சை கேட்டால் நிச்சயமாக நான் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாவேன் என்னால் நிச்சயமாக இதனை செய்ய முடியாது என கூறி மீண்டும் அதே நிதானத்தோடு நகர்ந்து கொண்டிருந்த நத்தையின் மீது முழு கவனத்தையும் செலுத்தினான். எவ்வளவு அமைதியாக அது நகர்ந்து கொண்டிருக்கிறது இதை எப்படி உனக்கு கொலை செய்ய தோன்றுகிறது, அதுவும் எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல். நிச்சயமாக என்னால் அதனை கொலை செய்ய முடியாது தொடர்ந்து நத்தையின் நகர்தலையும் அதன் அமைதியையும் இரசித்து கொண்டிருந்தவன் தன்னால் இயன்றவரை நகர்ந்து கைகளை நீட்டி அந்த நத்தை விட்டு செல்லும் பிசுபிசுப்பை விரல்களால் தடவி மீண்டும் தனதிடத்திற்கே வந்தவன், அந்த பிசுபிசுப்பை நுகர்ந்து பார்த்தான் அதன் நறுமணத்தை அவனால் உணர முடியாமல் போகவே பின் மெல்ல தன்னை யாரும் கவனிக்கிறார்களா என எல்லா பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு விரல்களில் ஒட்டி கொண்டிருக்கும் பிசுபிசுப்பை நாவினில் தடவிக்கொண்டான் அந்த பிசுபிசுப்பு அவனை ஏதோ செய்ய காரி துப்பியவன் இது என்ன இவ்வளவு அருவருப்பாக இருக்கிறது அந்த குரல் சொன்ன போதே உன்னை கொன்றிருக்க வேண்டும் உன்னை உயிரோடு விட்டதால்தான் உன்னுடைய அந்த அருவருப்பான பிசுபிசுப்பை நான் சுவை பார்க்க நேர்ந்தது நீ உயிரோடு இருக்க கூடாது உன்னை கொலை செய்வதற்கான நியாயமான காரணம் எனக்கு கிடைத்துவிட்டது என அந்த நத்தையை வசைபாடி கொண்டிருக்கும் போதே, அந்த சாலையின் முட்புதர்களை தாண்டி தூரத்தில் ஒரு வாகனம் வரும் ஒலியை கேட்க்க முடிந்தது, அந்த ஒலி அவனது முகத்தை மலரச்செய்தது, நீண்ட காலத்திற்கு பிறகு மிக உற்சாகமாக அந்த குரலின் மீதிருந்த பயம் விலகி தைரியமாக பேச தொடங்கினான், நான் அந்த நத்தையை கொலை செய்யலாம் என முடிவு செய்துவிட்டேன் என கூறி காத்திருந்தவனிடம்.
நிஜமாகவா சொல்கிறாய் நீ அந்த நத்தையை கொல்லபோவதில்லை என்றல்லவா என்னிடம் சொன்னாய், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன் அதன் பிறகு யோசித்து பார்த்தேன் நீ கேட்டதை நிராகரிக்கும் மனம் எனக்கில்லை எனவே நீ சொல்வது போலவே அதனை கொன்றுவிடலாம் என முடிவு செய்துவிட்டேன், ஆனால் அந்த கொலையை நான் செய்யப்போவதில்லை அதோ குளத்து சாலையை நோக்கி வரும் வாகனத்தின் ஒலி உனக்கு கேட்கிறதா அந்த ஒலியின் வாகனம் தான் அதனை செய்யும், அப்படி அந்த வாகனம் அதனை கொலை செய்துவிட்டால் நிச்சயமாக நீ சொன்னதுபோல் என்னை விட்டு விலகிவிடுவாய்தானே, இதற்குமேல் என்னை தொந்தரவு செய்யாதே நான் உனக்காகத்தான் இந்த கொலையை செய்ய போகிறேன் அந்த நத்தை இறப்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை நான் சொல்வது உனக்கு கேட்கிறதா ஏதாவது சொல்.
சற்றே அமைதி நிலவ அந்த குரல் உனக்கு நியாபகம் இருக்கிறதா நீதான் என்னிடம் முதலில் பேசினாய், என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிச்செல் என்னால் இங்கு வாழவே முடியாது, அல்லது நான் சொல்வதை கேள் என நீதான் என்னிடம் பேசினாய், நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நீதான் அதனை செய்தாய் அதேபோல் இப்போது நான் சொல்வதையும் நீ கேள் என சொல்லி முடிப்பதற்குள் இப்போது ஏன் அதைப்பற்றி பேசுகிறாய் நீ சொன்னதுபோல் நத்தையை கொன்றுவிடலாம் தயவு செய்து எதுவும் பேசாதே நீ என்ன சொன்னாலும் நான் செய்கிறேன் நீ என்னை விட்டு விலக கூட வேண்டாம் நீ என்னுடனே இருந்துகொள் நீ சொல்வதையெல்லாம் நான் நிச்சயமாக செய்கிறேன் இனிமேல் எதற்கும் மறுப்பு தெரிவிக்க மாட்டேன் ஆனால் அதைபற்றி மட்டும் பேசாதே. மீண்டும் அவனது உடல் நடுங்க தொடங்கியது அவனது உடலின் வியர்வை கால்களில் உள்ள காயங்களில் பட்டு எரிச்சலை உண்டுபண்ணியது, நிலைகொள்ளாமல் உட்காருவதும் பின் எழுவதுமாக என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் அவன் வைத்திருந்த துணிக்குள் தன்னை மறைத்துக்கொண்டான் அவனது சுவாசம் மேலும் கீழுமாக அலைமோத அந்த குரல் அவனை இருளின் நினைவுகளுக்கு கூட்டிச்செல்லவே, அதிலிருந்து விலகி போர்த்தி கொண்டிருந்த துணியை தூக்கியெறிந்தான் அது பறந்து குளத்தின் நெடுந்தூரத்தில் விழுந்தது.
இப்போது அந்த நத்தை சாலையின் பாதி தூரத்தை கடந்து சென்று கொண்டிருந்தது அது விட்டு செல்லும் பிசுபிசுப்பின் மேலே மற்றொரு நத்தையும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை தீவிரமாக கவனிக்க தொடங்கினான் இவ்வளவு களேபரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க அந்த நத்தைகள் எதையும் கண்டுகொள்ளாமல் அந்த சாலையை கடந்து மறுபுறம் குளத்திற்கு சென்று கொண்டிருந்தன, இவனுக்கு அந்த நத்தைகளை பார்த்தால் பொறாமையாக இருந்தது எப்படி இவை மட்டும் இவ்வளவு அமைதியாக நிதானமாக இருக்கிறது நான் ஏன் நத்தையாக பிறக்கவில்லை, அப்படி பிறந்திருந்தால் நானும் இதுபோல் நிதானமாக இருந்திருப்பேன் நான் மாறுவதற்காக வேண்டிக்கொள்கிறேன், ஆமாம் நான் யாரிடம் வேண்டுவது நமக்கு தெரிந்தது அந்த குரல் மட்டும் தானே அதனிடமே வேண்டி கொள்வோம் ஆனால் அந்த குரல் தானே இந்த நத்தையை கொலை செய்ய சொன்னது அப்படியானால் நிச்சயமாக நானும் அந்த குரலால் கொல்லப்படலாம் அல்லது அதோ வந்துகொண்டிருக்கும் வாகனத்தாலும் கொல்லப்படலாம் வேண்டாம் வேண்டாம் நாம் இப்படியே இருந்துகொள்வோம்.
இப்போது நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அந்த வாகனம் அதனை கொலை செய்ய வேண்டும் பின் இந்த குரலிடமிருந்து நாம் தப்பித்துவிடலாம், ஆனால் அந்த குரல் ஒரு நத்தையை தானே கொலை செய்ய சொன்னது இப்போது இரண்டு நத்தைகள் இருக்கிறதே பின்னால் வந்து கொண்டிருக்கும் நத்தையை ஏன் கொல்ல வேண்டும் அது எந்த தவறும் செய்யவில்லையே என யோசித்துக்கொண்டே அதன் நகர்தலை கவனிக்க தொடங்கினான். முன்னால் நகர்ந்து கொண்டிருக்கும் நத்தையின் பிசுபிசுப்பை நுகர்ந்து அதனை சுவைத்துக்கொண்டே வேகமாக அந்த நத்தையை அடைய முயற்சி செய்தது, இவனது நாவினில் எஞ்சி இருக்கும் பிசுபிசுப்பை காரி உமிழ்ந்துகொண்டே அவற்றை கவனித்து கொண்டிருந்தான், தனக்கு பின்னல் வந்து கொண்டிருக்கும் நத்தையை அறிந்து முதல் நத்தை தனது பயணத்தை நிறுத்திக்கொண்டு அது வரும்வரை காத்திருந்தது இருவரும் அந்த சாலையின் நடுமத்தியில் சந்தித்துக்கொண்டனர்.
இவனால் அந்த காட்சியை நம்பவே முடியவில்லை என்ன செய்து கொண்டிருக்கின்றன அந்த நத்தை எதற்காக அப்படி திரும்பி வந்தது, மறுபுற கரைக்குதானே சென்றுகொண்டிருந்தது பின்பு ஏன் இப்படி இருவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என எதுவுமே புரியாமல், என்னதான் நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம் என முடிவு செய்தான் கொஞ்சமும் கண்ணை சிமிட்டாமல் அவைகளையே பார்த்துக்கொண்டிருக்க வாகனத்தின் ஒலி இப்போது இன்னும் தெளிவாக கேட்க தொடங்கியது. இரண்டு நத்தைகளும் ஒருவர் மீது ஒருவர் ஏற முயற்சித்து கொண்டிருந்தன அதன் வழவழப்பான உடல்கள் பின்னிக்கொள்ள இருவரும் உடல்களில் வழியும் பிசுபிசுப்பை முகர்ந்து ருசித்து மோகத்தில் திளைத்திருக்க அது இவனை கிளர்ச்சியடைய செய்தது தனது அழுக்கேறிய உடைக்குள் நகரும் ஆண்குறியை உடையின் மேலிருந்து தடவிக்கொண்டே நத்தையின் புணர்தலை ரசித்து கொண்டிருந்தான், அவை இரண்டும் விடுபடுவதாக தெரியவில்லை இவனுடைய மோகம் தலைக்கேற அதுவரை கட்டுப்படுத்தி கொண்டிருந்தவன் உடையினுள் நெளிந்து கொண்டிருந்த குறியை வெளியே எடுத்து கைகளால் அதனை முழுமையாக பற்றிக்கொண்டு காற்றினில் புணர்ந்து கொண்டிருந்தான், தன முன்னாள் இருந்த நத்தையின் காட்சி மறைய அவன் அந்த ஊரில் முடிந்துபோன திருவிழாக்கால நினைவுகளுக்குள் நுழைந்தான்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அந்த திருவிழாவிற்கு அந்த ஊரில் குடியிருந்தவர்களின் அத்தனை சொந்தங்களும் திரண்டிருந்தனர் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த விற்பனையாளர்களின் கடைகள் தெருவெங்கும் முளைத்திருந்தது, குழந்தைகள் விளையாட்டு பொருட்களை வாங்குவதும் அதனை கைகளில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் விளையாடுவதும், பருவ வயதினர் புதிதாக ஊருக்குள் வந்திருந்தவர்களில் யார் அழகாக இருக்கிறார்கள் என போட்டி நடத்தி கொண்டிருந்தனர், பெரியவர்கள் திருவிழாக்கான வேலைகளை செய்வதும் சிலர் குடித்துவிட்டு ஆடுவதும் என அந்த ஊர் மிகுந்த பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அன்றைய இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி இருந்தது மக்கள் அனைவரும் விரைவாகவே உணவுகளை உண்டு எல்லோரும் மேடைக்கு முன்பாக இடம் பிடிக்க வேக வேகமாக கிளம்பி கொண்டிருந்தார்கள் மேடையை சுற்றி மூன்று பக்கங்களும் அந்த ஊரின் வயதானவர்களும் அவர்களுக்கு இடையே மத்திய வயதினரும் இளைஞர்களும் சில சிறு வயதினரும் இடங்களுக்காக அடித்துக்கொண்டு ஆக்கிரமித்திருந்தனர், ஊரின் முக்கியஸ்தர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை அவர்களுக்கென்று சில சலுகைகள் உண்டு அவர்கள் மேடைக்கு பின் பக்கம் உடைகளை உடுத்தி கொண்டிருக்கும் ஆட்ட கலைங்கர்களை அவர்களின் கூடாரத்திற்குள்ளே சென்று பார்க்கவும் பேசவும் முடியும், அப்படி பேசும் சாக்கினில் அவர்களின் இச்சைகளை தீர்த்து கொள்வார்கள் ஊரின் பெண்களுக்கு கடைசி வரிசையில் இடம் கிடைத்தது, ஒருவழியாக எல்லோரும் அமர சிலர் அங்கும் இங்கும் நின்றுகொண்டிருக்க. கைகளில் வேப்பிலையோடு கடவுள் பாடல்களில் ஆரம்பித்த நடனம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பாடல்களுக்கு நகர்ந்தது நள்ளிரவு நெருங்க நெருங்க பெண்கள் தானாகவே தங்களுக்கு தூக்கம் வருவதாக சொல்லி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர் சிலர் இனிமே இவனுங்க ஆட்டத்த பாக்க சகிக்காது என்ச் சொல்லியே கிளம்பினார்கள் மிச்சம் மீதி இருந்தவர்களையும் ஊர் முக்கியஸ்தர்கள் மைக்கில் கெளம்புரவங்க கெளம்புங்கப்பா நேரம் ரொம்ப ஆச்சு சீகிரமா பொண்ணுங்க எல்லாம் வீட்டுக்கு கெளம்புங்க என மேடையிலேறி சொன்னார்கள், எல்லா பெண்களும் ஏதோ ரொம்ப அக்கறை இருக்க மாதிரி பேசுறானுங்க பாரு நாய்ங்க எங்க என்ன தெரியும்னு இனி எட்டி பாத்துட்டே இருப்பானுங்க வாங்கடி நாம போலாம் இவனுங்க திருந்தவே மாட்டானுங்க என சொல்லி எல்லா பெண்களும் அவர் அவர் வீடுகளுக்கு கிளம்ப தொடங்கினர். இவனது வீட்டிலிருந்து பாடலின் ஒலியை மட்டுமே கேட்க முடியும் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியின் நீளத்தின் விளிம்புவரை சென்றுவிட்டான் அப்போதும் அவனால் பாடல் மட்டுமே கேட்க முடிந்தது. இந்த இரவு நடனத்திற்காகவே அந்த பாடல்கள் எழுதப்பட்டது போல் இவனுக்கு தோன்றியது, ஆடிக்கொண்டிருப்பவர்களை பார்க்க இயலவில்லை என்னும் தாகம் மறைந்து அவனால் அந்த வரிகளுக்குள் காமத்தை உணர முடிந்தது அவனுக்கு வேறு வழியும் இல்லை பாடல் வரிகளில் உச்சமடைந்து தனது ஆடைகளை கலைத்து நிர்வாணமானான், அவள் வருவதை அறியாமல் விரல்களுக்கிடையில் புணர்ந்து கொண்டிருந்தவனை எதுவும் சொல்லாமல் இவனை காணாதது போல் மிக அமைதியாக கூடாரத்திற்குள் நுழைந்தாள், கூடாரத்தின் தட்டி மூடப்படும் சத்தம் கேட்டு திடிக்கிட்டு புணர்தலை பாதியிலே நிறுத்தியவன் தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதாக நினைத்து பதட்டத்தோடு மீண்டும் தனதிடத்திற்கே வந்தமர்ந்தான். இந்த இரவினில் கற்றை புணர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம் என தனக்குள்ளே முணுமுணுத்து மிக வேகமாக புணரத் தொடங்கினான் நத்தைகள் விடுபடுவதாக இல்லை அவைகள் நீண்ட நேரமாக பின்னிக் கொண்டிருக்கின்றன.
இப்போது அந்த சாலையின் முட்புதர்களுக்கிடையில் வாகனத்தின் வெளிச்சம் தெரிய தொடங்கியுள்ளது அதனை பார்த்ததும் இவன் மீண்டும் அந்த நத்தைகளின் மீது இறக்கமானான், புணர்தலில் திளைத்திருக்கும் நத்தைகள் வரும் வாகனத்தால் கொல்லப்பட்டால், அவைகள் பாவம் இல்லையா பின்பு நான் எப்படி எனது புணர்தலை தொடருவது வாகனம் வருவதற்குள் நம் புணர்தலை முடித்துக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டான்.
நான் அந்த திருவிழாவில் நிகழ்ந்ததை சொல்லவில்லை நான் உன்னிடம் நினைவிருக்கிறதா என கேட்டது வேறு ஒன்று அது உனக்கும் நன்றாகவே தெரியும் என அந்த குரல் மீண்டும் குறுக்கிட. நீ எதை பற்றியும் பேசாதே பழைய கதைகளை பேசுவதால் ஒன்றும் நிகழப்போவதில்லை நான் குற்றவுணர்ச்சியிலிருந்து மீண்டு விட்டேன் என்னை மறுபடியும் அதற்குள் கூட்டிச்செல்ல முற்படாதே என கூறினான் நீ சொல்வதுபோல் நிச்சயமாக அந்த நத்தை கொல்லைப்படும் நீ ஒன்றுதான் கொல்ல வேண்டும் என சொன்னாய் ஆனால் நானோ இரண்டு நத்தைகளை உனக்காக கொல்ல போகிறேன் நீ நிம்மதியாக இரு என்னை தொந்தரவு செய்யாதே நான் எனது உச்சத்தை அடைந்துகொள்கிறேன் என்றவனிடம், நீ எவ்வளவு இழிவானவன் தெரியுமா, உலகத்தில் எந்த உயிரினமும் இப்படி மற்றவர்கள் புணர்வதை பார்த்து கிளர்ச்சி அடைவதாக எனக்கு தெரியவில்லை உன்னை நினைத்தால் எனக்கு அருவருப்பாக இருக்கிறது நத்தையை பார்த்து உன்னால் எப்படி இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்ள முடிகிறது. நீ இந்த அளவிற்கு ஒரு இழிவான பிறவியாய் இருப்பாய் என நான் நினைக்கவில்லை, உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதே எனக்கு அசிங்கமாக இருக்கிறது, இனி உன்னிடம் எப்போதும் நான் பேசப்போவதில்லை நீ அந்த நத்தையை கொலை செய்யவும் வேண்டாம் ஒன்றும் செய்ய வேண்டாம் நான் போகிறேன் உன்னை நீயே பார்த்துக்கொள் என அந்த குரல் அமைதியானது. இதை கேட்டதும் சட்டென புணர்தலை நிறுத்தியவன் உன்னுடைய விருப்பம் நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் நான் உன்னை விடுவித்தால்தானே உன்னால் செல்ல முடியும் நான் உன்னை விடுவிப்பதாக இல்லை நான் புணர்வது உனக்கு அருவருப்பாக இருக்கிறது தானே, அதற்காகவே தொடர்ந்து இதனை செய்து கொண்டிருப்பேன் நீ துன்புறுவதை நான் இரசித்துக்கொண்டிருக்கிறேன் இவ்வளவு நேரமாக நீ என்னை எவ்வளவு பதட்டத்திற்கு உள்ளாக்கியிருப்பாய் நான் எவ்வளவு கெஞ்சினேன் என்னை விட்டுவிடு என்று. இப்போது நான் உன்னை விடுவதாக இல்லை நீ எனது செயல்களின் அருவருப்பை பார்த்து சகிக்க முடியாமல் உன்னை நீயே கொலை செய்துகொள்வதை நான் பார்க்கும்வரை இப்படி இழிவாகத்தான் நடந்துகொள்வேன் என தனது ஆண்குறியை மீண்டும் காற்றினில் புணரத் தொடங்கினான் கண்கள் மயங்கி கற்பனைகளில் உச்சமடைய உடலெங்கும் சிதறிய விந்து நத்தையின் பிசுபிசுப்பை ஒத்திருந்தது, அவனால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை உடலின் எல்லா பக்கமும் ஒருவித வழவழப்பான ஈரத்தை உணர்ந்தான், இப்போது நத்தை விட்டு செல்லும் பிசுபிசுப்பின் நறுமணத்தை அவனால் உணர முடிந்தது அது அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தியது, இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததில் இப்படியொரு அருவருப்பை முதல்முறையாக உணர்கிறான்.
நான் ஒரு இழிவான பிறவி என தன்னை தானே வெறுக்க தொடங்கினான், அந்த குரல் நம்மை பற்றி சொன்னது உண்மையாக இருக்குமோ என எண்ணத்தொடங்கினான், தன்னை மிக அருவருப்பான ஜந்துவாக கற்பனைகள் செய்தான். அவனது உடலில் வழியும் வியர்வையும் நத்தையின் பிசுபிசுப்பு நறுமணத்தை ஒத்திருந்தது. அந்த குரலிடம் அழுது புலம்பினான், எப்படியாவது இந்த அசிங்கத்திலிருந்து என்னை விடுவித்துவிடு நான் உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் நீ எங்கும் போக வேண்டாம் என்னுடனே இருந்துவிடு நீ இல்லாமல் என்னால் நிச்சயமாக வாழ முடியாது, நான் ஒருபோதும் இனிமேல் இதுபோன்ற அருவருப்பான காரியங்களை செய்ய மாட்டேன் என்னை நம்பு என மன்றாடினான்.
நான் யார் உன்னை மன்னிப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் நீ உனக்கு தோன்றிய எல்லாவற்றையும் உனது விருப்பம் போல செய்துகொள், நான் ஒருபோதும் உனது செயல்களுக்கு இடையூறாக நிற்க மாட்டேன் ஆனால் நீ செய்த அருவருப்பான செயல்களிலிருந்து உன்னை யாராலும் விடுவிக்கவே முடியாது. அதோ அந்த வாகனத்தின் வெளிச்சம் புணர்ந்து கொண்டிருக்கும் நத்தைகளின் மீது படத்தொடங்கியுள்ளது, அந்த வெளிச்சத்தில் நத்தைகளின் மீதுள்ள ஈரப்பதம் பிரகாசிப்பதை பார் இன்னும் சற்று நேரத்தில் அவை கொல்லப்படபோவதை அறியாமல் எப்படி காமத்தில் திளைத்திருக்கின்ற, உன்னால் முடிந்தால் அந்த நத்தைகளை காப்பாற்று வேறெதுவும் நீ செய்ய வேண்டாம்.
இப்போது வாகன வெளிச்சத்தின் அடர்த்தி நத்தைகளை உள்வாங்கி கொண்டிருந்தது, இந்த நத்தைகள் கொல்லப்பட கூடாது நாம் எப்படியாவது இதனை காப்பாற்றிவிட வேண்டும் என யோசித்தான் தன்னால் இயன்றவரை கைகளை எட்டி நத்தைகளை காப்பாற்ற முற்பட்டான், அவனது விரல் நுணியின் மிக அருகினில் நத்தைகள் புணர்ந்து கொண்டிருந்தன கைகளில் ஒட்டிக்கொண்ட பிசுபிசுப்பை துடைத்தெறிந்து கொண்டே என்ன செய்வதென யோசித்து கொண்டிருக்க வாகனத்தின் வெளிச்சம் மிக அருகினில் வரத்தொடங்கியது இவனது கண்கள் கூச மீண்டும் கூடாரத்தின் அருகினில் வந்தமர்ந்து கொண்டான், தனதருகில்தான் அவன் பூட்டப்பட்டிருக்கும் சங்கிலியின் சாவி தொங்கி கொண்டிருந்தது எவ்வளவு முயன்றும் அதனை எடுத்து தனது கால் விலங்கை அவனால் விடுவிக்கவே முடியவில்லை, அதனை எடுக்கலாம் என யோசித்தாலே அவனது உடல் பயத்தினில் நடுங்கத் தொடங்கியது. செய்வதறியாது நத்தைகளின் மிக அருகினில் நெருங்கிவிட்ட வாகன சக்கரத்தை பார்க்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
வாகனத்தி ஒலி மிக அருகினில் வந்து வேகமாக இவனை கடந்து சென்றது, அவனது உடலின் மீது தெறித்த சதைகளிலிருந்து வழிந்த பிசுபிசுப்பை அவனது இறுதி நிமிடங்கள்வரை துடைத்துக்கொண்டே இருந்தான்......
About the WRITER
VIGNESH
ABOVE PHOTOGRAPH WILL BE USED FOR
THE PARTICIPATION CERTIFICATE.
bottom of page